மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்; ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்! 

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்; ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்! 

டெல்லி,நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் கமிஷனர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு நடத்தினர்.

அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர்.இந்நிலையில், அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்ததையடுத்து 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.