முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய பெண்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்ட காணொளி!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவியுமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.

அதுகுறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த நால்வரையும் திங்கட்கிழமை (13) மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளார். 

குறித்த கைது சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. 

சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22),

சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40),

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். 

குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.