சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர ரணில் சாதகமான பதில்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (5.2.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்த நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர் - 05.02.2024