இசைத்துறை மேதை - கலாசூரி அருந்ததி ஶ்ரீ ரங்கநாதன் காலமானார்!

இலங்கையின் இசை ஆளுமையும் ஒலி, ஒளிபரப்பாளருமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் நேற்று (17) அவுஸ்திரேலியா, சிட்னியில் காலமானார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகர், ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவராவார்.
இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக சேவையாற்றியிருந்தார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்ற பெருமையைக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.