நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி விலகல்!

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகியுள்ளார்.

• தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதால் நாதகவில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

• வலதுசாரிகளின் வழிகாட்டுதல் பேரில் சீமான் அரசியல் பேசுவதாக ஜெகதீச பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதால் நாதகவில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலதுசாரிகளின் வழிகாட்டுதல் பேரில் சீமான் அரசியல் பேசுவதாக ஜெகதீச பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், தத்துவத்தை நிறைவேற்ற மிகச்சிறந்த ஒழுக்கமுள்ள தலைவன் இல்லாவிட்டால் அனைத்தும் கேலி கூத்துதான் என்றார்.

பெரியாருக்கு எதிராக சீமான் பேசியபோது அதனை கண்டித்து ஏற்கனவே ஜெகதீச பாண்டியன் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.