சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு தொடர்பில் நிதி அமைச்சு புதிய நடவடிக்கை!

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு தொடர்பில் நிதி அமைச்சு புதிய நடவடிக்கை!

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிற்காக வருடத்திற்கு சுமார் 80 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக திரைசேரியில் இருந்து 105 பில்லியன் ரூபாய் கடனாக பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி இவ்விடயத்தில் மிகவும் சிரத்தையாக செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதுப் பிரிவினரின் வட்டி விகிதங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது நிலவும் பணப் புழக்கம் குறித்து தெளிவான அறிக்கையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.