15ஆம் திகதியளவில் காற்று சுழற்சி மற்றும் சூறாவளி உருவாகும் சாத்தியம்!
கடந்த 05ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வரும் 15ஆம் திகதியளவில் ஒரு காற்று சுழற்சி உருவாகலாம் என குறிப்பிட்டது போல் இன்று தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது.
இது எதிர்வரும் 13, 14, 15ஆம் திகதியளவில் இலங்கையின் தெற்காக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமில்லாது எதிர்வரும் 21ஆம் திகதியளவில் அந்தமான் கடல் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகி, அது படிப்படியாக வலுவடைந்து,
24ஆம் திகதியளவில் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், 25ஆம் திகதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,
ஒரு சூறாவளியாக மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளது.
இது எதிவரும் 26, 27ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் அல்லது பங்காளதேஷ் நோக்கி நகர்ந்து, ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Remal என்னும் பெயர் சூட்டப்படும்.