'காலில் விழுந்தாவது ஆட்களை கூட்டிட்டு வாங்கப்பா' ஆளில்லாத மேடையில் கூவிய அரசியல்வாதி!

தமிழகம் விழுப்புரத்தில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்திற்கு போதிய ஆதரவாளர்கள் வராததால் வெறுமையாக இருந்த நாற்காலிகளை பார்த்து பதறிப்போன நிர்வாகி ஒருவர், விடுத்த அறிவிப்பு பேசு பொருளாகியுள்ளது.

'காலில் விழுந்தாவது ஆட்களை கூட்டிட்டு வாங்கப்பா' ஆளில்லாத மேடையில் கூவிய அரசியல்வாதி!

''காலில் விழுந்தாவது ஆட்களை கூட்டிட்டு வாங்கப்பா' என ஒலிவாங்கியின் மூலம் அறிவித்துள்ளார்

தமிழக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட பாரதீய ஜனதாக்கட்சியின் சார்பில் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன்போதே கட்சியின் நிர்வாகி ஒருவர் பதறிய நிலையில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

''சேர் நாற்காலியாக இருப்பதை படம் பிடிக்கிறாங்க, பாரதீய ஜனதா சொந்தங்களே வாங்க, ஏங்க நின்று கொண்டிருக்கீங்க, கொஞ்சம் எல்லாரையும் கூப்பிடுங்கப்பா, காலில் விழுந்தாவது கூட்டிட்டுங்க வாங்கப்பா, பேச ஆரம்பிச்சுடாங்க, சொல்லிகிட்டே இருக்கிறேன், ஏன் இன்னும் உட்காரமா நிற்கிறீங்க'' என்று விழுப்புரம் மேற்கு மாவட்ட கட்சியின் தலைவர் கலிவரதன் ஒலிவாங்கியிலேயே அழைப்பை விடுத்தார்.

இந்தநிலையில் சிறிது சிறிதாக மக்கள் கூட்டம் அழைத்து வரப்பட்ட பின்னரே பெண் நிர்வாகி ஒருவரை அவர் பேசுவதற்காக மேடைக்கு அழைத்தார்.