நீர் கட்டண சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம்! 

நீர் கட்டண சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டண சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம்! 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற சமூக நலத்திட்டங்களின் கீழ் உள்ள சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்கும் அதேவேளை நியாயமான நீர் அணுகலை உறுதி செய்வதே புதிய நீர் கட்டண சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்படமாட்டாது எனவும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நீர்வழங்கல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
......................