ஹிருணிகாவுக்கு பிணை வழங்க கோரிக்கை - வழங்குமா நீதிமன்றம்!

இளைஞன் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிணை மனு அடுத்த வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தெமட்டகொடையில் கடையொன்றில் பணிபுரிந்து வந்த இளைஞரை கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.
அவர் மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.