இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆண்டு இதே காலப்பகுதியுடன் (ஜனவரி - மே) ஒப்பிடும் போது இது 11.8 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.