வாகன வருமான அனுமதிப் பதிவு தொடர்பான அறிவிப்பு!

வாகன வருமான அனுமதிப் பதிவு தொடர்பான அறிவிப்பு!

மேல் மாகாணம் தவிர்ந்த, ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய முடியுமென சப்ரகமுவ மாகாண செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபை இந்த வசதியை கடந்த 3ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 29 பிரதேச செயலக அலுவலகங்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருடாந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை சப்ரகமுவ மாகாண வளாகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.