உறுதியானது ஒலிம்பிக் வாய்ப்பு!
இலங்கை மெய்வல்லுனர் வீராங்கணை தருஷி கருணாரத்ன பெரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.
இதற்கென இடம்பெற்ற தகுதிகாண் போட்டிகளில் தருஷி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதன் விளைவாக 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான தரப்படுத்தலில் 49வது இடத்தை தருஷி பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை தருஷி பெற்றுக்கொண்டுள்ளார். 2023ம் ஆண்டு ஆசிய மெல்வல்லுனர் செம்பியன்ஷிப் போட்டிகளில் 400மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கையின் நதீஷா தில்ஹானி லேக்கம்கே பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் கயில் அபேசிங்க மற்றும் கங்கா செனவிரத்ன உள்ளிட்டோரும் 2024 பெரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளனர்.
ஆடவருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் கயில் அபேசிங்க பங்கேற்கவுள்ளதுடன் மகளிருக்கான 100 மீற்றர் பெக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் கங்கா செனவிரத்ன பங்கேற்கவுள்ளார்.