இலங்கையில் 14,000க்கும் மேற்பட்ட பண்ணைகள் மூடப்பட்டன!
இலங்கையில் 14,000க்கும் மேற்பட்ட பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக கோபா எனும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மாகாணங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் கோபா குழு அண்மையில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன
இதன்படி மூடப்பட்டுள்ள பண்ணைகளில் பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலான பண்ணைகள் எனவும் பெரும்பாலான பண்ணைகள் கால்நடைகள் திருட்டு காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.