கம்பஹா தொடருந்து நிலையத்தில் பயணிகள் அசௌகரியம்!

பயணச் சீட்டு வழங்கும் 2 கருமபீடங்கள் மூடப்பட்டிருந்தமையினால் கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு இன்று சென்றிருந்த பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
தொடருந்து நிலைய அதிபர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் பயணச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்காரணமாக பயணிகள் உரிய நேரத்திற்கு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.