வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதம் : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதம் : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் ஒருவர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணின் இலங்கை பெறுமதியில் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

ஹிக்கடுவை காவல் நிலைய பொறுப்பதிகாரி - 071 - 8591457 ஹிக்கடுவை காவல் நிலையம் - 091 - 2277222