ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மனு மீதான விசாரணையிலிருந்து நீதியரசர் விலகல்!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெல இன்று (16) விலகியுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மனு மீதான விசாரணையிலிருந்து நீதியரசர் விலகல்!

குறித்த வழக்கிலிருந்து இதுவரை மூன்று நீதியரசர்கள் விலகியுள்ளனர்.

இன்று குறித்த மனு, டீ.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் தாம் குறித்த விசாரணையில் இருந்து விலகுவதாக நீதியரசர் நீல் இத்தவெல அறிவித்துள்ளார்.

இதற்கமைய, மனு மீதான விசாரணைகளுக்காக சோபித்த ராஜகருணா மற்றும் டீ.என்.சமரகோன் ஆகிய நீதியரசர்கள் அடங்கிய புதிய ஆயம் ஒன்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, புதிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.