தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளுக்காக தபால் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை நேற்றிலிருந்து (06) எதிர்வரும் மே மாதம் 07ஆம் திகதிவரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் பிரேமசந்ர ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான தபால் வாக்கு பொதி தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் இன்றிலிருந்து (07) தபால் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி இடம்பெறுமென்பதுடன், தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த மூன்று தினங்களில் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.