நுவரெலியா மாவட்டத்தில் 534 நிலையங்களில் வாக்கெடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் இன்று ஆரம்பம்!
இலங்கையின் 9 வது ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.
இதற்கான அனைத்து பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கள் 534 நான்கு நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் இம் முறை 605,292பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்களும். கொத்மலை வாக்காளர் தொகுதியில் 88,219 பேரும் ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 பேரும் வலப்பனை தேர்தல் தொகுதியில் 90,990 பேரும், தபால்மூல வாக்குகள் 19748 பேரும் இம் முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் 277 நிலையங்களிலும் ஹங்குராங்கெத்த தொகுதில் 82, கொத்மலை 90, வலப்பனையில் தேர்தல் தொகுதியில் 85 வாக்ககெடுப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தேர்தல் பணியாளர்கள் வாகனங்கள் வாக்களிக்கும் அட்டைகள் வாக்கெடுப்பு பெட்டிகளையும் அனுப்பும் பணிகள் இன்று காலை நுவரெலியா காமினி வித்தயாலயத்திலும் நுவரெலியா நகரசபை மண்டபத்திலும் ஆரம்பமாகின.
குறித்த பணிகளுக்காக 1784 பொலிஸ் மற்றும் இரானுவ பாதுகாப்பு உத்தியோகஸத்தர்கள் பாதுகாப்பு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாகவும் காமினி வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 41 நிலையங்களில் 21ம் திகதி 4.30 மணியளவில் தபால்மூல வாக்கெடுப்புக்கள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் 36 முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதில் பாராதூரமான எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் நியாயமான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.