பிரான்ஸ் ஆர்வலரிடம் தமிழில் கேள்வியெழுப்புமாறு கோரிய ஜனாதிபதி ரணில்!

பிரான்ஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வியொன்றை எழுப்ப முடியாமல் இருந்த போது தமிழில் கேள்வி எழுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

பிரான்ஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த தமிழ் செயற்பாட்டாளர், ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் இலங்கையின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

இலங்கையில் அரசாங்கம் ஜனநாயகமானது என்பதை தான் நம்பவில்லை என்றும் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, குறித்த செயற்பாட்டாளர் என்ன கூற முயற்சிக்கின்றார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசுமாறும் கேட்டுக்கொண்டார்.

தனக்கு தமிழ் தெரியும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆர்வலர் பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார், 

இருந்தபோதும் அமைப்பாளர்களால் அவருடைய கேள்வி குறைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

https://youtu.be/ddzvT33nc_Q