ஜனாதிபதி தேர்தல் - ஊடக வழிகாட்டுதல் வர்த்தமானி வெளியீடு!
ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல், பிற அறிக்கையிடல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஊடக வழிகாட்டுதல்களை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்னணு ஊடக நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக இணையதள நிர்வாகிகள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தனித்தனியாக ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.