இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
கடந்த பெப்ரவரி மாதத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.4 சதவீதமாக வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய நாணய அலகுகளுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவானது வலுவடைந்துள்ளது.
இதற்கமைய, இந்திய ரூபாவுக்கு நிராக 4.2 சதவீதமாகவும், யூரோவுக்கு நிகராக 6.8 சதவீதமாகவும், ஸ்ரேலிங் பவுன்ஸ்க்கு நிகராக 5 சதவீதமாகவும் இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளது.