கடலில் இடம்பெற்ற நீச்சல் போட்டியில் சாதனைப் படைத்த யாழ் பெண்கள்!

பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடலில் இடம்பெற்ற நீச்சல் போட்டியில் சாதனைப் படைத்த யாழ் பெண்கள்!

நான்கு பேரப்பிள்ளைகள், ஆறு பிள்ளைகளுக்கு தாயான 56 வயதான பெண்மணி ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து மூன்றாமிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளுக்கு தாயான 40 வயது பெண்மணி ஒருவர் முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44 வயது பெண்மணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் நேற்று (17) இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல் போட்டி இடம்பெற்றது.

இதன்போதே குறித்த வயோதிப மாதுக்கள் நீத்தி சாதனை படைத்துள்ளனர். 

அதேவேளை, ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன.

ஆயினும் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் வயோதிப மாதுக்களின் நீச்சல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பருத்தித்துறை- தென்னியம்மன் முனையில் இருந்து இன்பருட்டி வரை நீச்சல் போட்டி இடம்பெற்றது.