பூஸா சிறைச்சாலையிலிருந்து தொலைபேசிகள் கைப்பற்றல்!
காலி - பூஸா சிறைச்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் ஏ மற்றும் டீ பிரிவுகளிலிருந்து 2 கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் காலி பிராந்திய கட்டளை அதிகாரியின் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.