காட்டு யானை மோதல்களை தவிர்க்க விசேட தீர்மானம் - ரயில்வே திணைக்களம்!
காட்டு யானைகள் ரயில்களின் மீது மோதுவதை தவிர்க்கும் வகையில் ரயில்வே திணைக்களம் விசேட தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்ததுடன் ரயிலுக்கும் ரயில் பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதனைக் தவிர்க்கும் வகையில் திருகோணமலை - மட்டக்களப்பு மார்க்கத்தில் பகல் வேளைகளில் மட்டும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.