பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை!

பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.