ரணிலின் இந்திய பயணம், இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றத்தின் ஆரம்பம் -வினய் மோகன்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம், இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றத்தின் ஆரம்பம் என இந்திய வெளியுறச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம், இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றத்தின் ஆரம்பம் என இந்திய வெளியுறச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
தமது பயணம் குறித்து, நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர், நேற்று மாலை நாடு திரும்பினார்.
இலங்கை ஜனாதிபதி, இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதே தமது பயணத்தின் நோக்கமாகும்.
இலங்கை அரச தலைமைத்துவத்துடனும், வெளிவிவகார அமைச்சுடனும் நடத்திய பேச்சுகள், ஜனாதிபதியின் இந்திய பயணமானது, இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றமொன்றின் புள்ளி என்பதனை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்தன.
அத்துடன், இந்த பயணத்துக்கு முன்னதாக தம்மால் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முக்கிய விடயங்கள், விஜயத்தின் போதான செயற்பாடுகள், இலங்கை தலைமைத்துவத்தின் முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இருதரப்பு உறவின் பலம், உறவினை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பின் பல்வேறு கூறுகள், இந்தியாவும் இலங்கையும் அனுபவிக்கும் பொருளாதார பங்குடைமை முழுவதும் எதிர்வரும் ஆண்டுகளில் காணப்படும் முக்கிய கூறுகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணத்தின் வெற்றியினை உறுதிப்படுத்துவதே பிரதான இலக்காகும்.
அவரது பயணத்தை வெற்றிகரமாக மாற்றவும் அவ்வழியில் தங்கள் உறவை வெற்றியடையச் செய்யவும் தாம் எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவத்ரா தெரிவித்துள்ளார்.