மதுபான சாலையை மூடுமாறு மக்கள் பாதையை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம்!
இரத்தினபுரி ஓப்பநாயக்க ஹுனுவல சந்தியில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபான சாலையை மூடுமாறு மக்கள் பாதையை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இரத்தினபுரி ஓப்பநாயக்க ஹுனுவல சந்தியில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபான சாலையை மூடுமாறு மக்கள் பாதையை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டு இருந்த மதுபானசாலையை மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பிரதேச மக்கள் அறநெறி பாடசாலை மாணவர்கள் மத குருமார்கள் சமுகம் அமைப்புக்கள் அரச மற்றும் அரச சார்பற்ற ஊழியர்கள் தொண்டு நிறுவனங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதனால் பதுளை கொழும்பு வீதி
பலாங்கொடை கொழும்பு வீதி
பலாங்கொடை இரத்தினபுரி வீதிகளின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.