தொடருந்து தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் 

தொடருந்து தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் 

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகி வருகின்றன.

இது தொடர்பில் இன்று பிற்பகல் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.