அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.

 சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும்.

கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 162 ரூபாய் ஆகும்.

ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாய் ஆகும்.

 உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராமின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 185 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வெள்ளை கௌப்பி ஒரு கிலோ கிராமின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாய் ஆகும்.

இதேவேளை ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபாய் ஆகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related