உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு!
யாழ் - குப்பிளான் பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த விவகாரம் தொடர்பில், தரகு பணம் கைமாறப்பட்டமைக்கான சாத்தியப்பாடுகள் தென்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்பட்டன.
எனினும், குறித்த விதை உருளைக்கிழங்குகள் ஒருவகை பக்டீறியா தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ளன.
குறித்த உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில், தரகு பணம் கைமாறப்பட்டதாக சந்தேகத்துக்கிடமான பல விடயங்கள் இடம்பெற்றுள்ளமையை அறியமுடிந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான ஆய்வறிக்கை விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த விடயத்தில், தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த விவகாரம் தொடர்பில், தரகு பணம் கைமாறப்பட்டமைக்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்பட்டன.
எனினும், குறித்த விதை உருளைக்கிழங்குகள் ஒருவகை பக்டீறியா தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ளன.
குறித்த உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில், தரகு பணம் கைமாறப்பட்டமைக்கான சந்தேகத்துக்கிடமான பல விடயங்கள் இடம்பெற்றுள்ளமையை அறியமுடிந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான ஆய்வறிக்கை விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயத்தில், தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.