பதுளை - கனவரல்ல பகுதியில் சேர்ந்த 18 குடும்பங்கள் இடப்பெயர்வு!
பதுளை - நமுனுகுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனவரல்ல - மவுஸ்ஸாகலை பிரிவில் மண்சரிவு காரணமாக 18 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் கனவரல்ல இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், மடுல்சீமை விராளிபத்தன - டூமோ பிரிவில் 49 குடும்பங்களை சேர்ந்த 154 பேர் கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.