விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

யாழ். சாவகச்சோி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் படுகாயமடைந்த குறித்த மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிாிழந்துள்ளார். 

சம்பவத்தில் கல்வி பொதுத்தராதர உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.