விடுமுறைக்கு பதிலாக சனி, ஞாயிறு தினங்களில் பாடசாலைகள் திறக்கப்படும்!
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (06) நாளை மறுதினமும் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (06) நாளை மறுதினமும் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலிய வலய கல்வி பணிப்பாளர் டி.எம்.பின் எல் அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் இரண்டு தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இதன்படி நாளையும் நாளை மறுதினமும் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண ஆளுநர் மற்றும் கல்வி செயலாளர் ஆகியோருடன் தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலீடாக, காலநிலை சீரடைந்ததன் பின்னர் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வகுப்புகள் நடத்தப்படும்.
அதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ஹட்டன் கல்வி வலயக் கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.