அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி வீழ்ச்சி!
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 308 ரூபாய் 60 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபாய் 70 சதமாக இருந்தது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322 ரூபாய் 20 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322 ரூபாய் 68 சதமாக இருந்தது.