உலகத் தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்பந்தன் - கஜேந்திரன் சாடல்!

உலகத் தமிழ் பேரவையின் ஒரு முகமூடியாக சுமந்திரனும் சம்பந்தனும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகத் தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்பந்தன் - கஜேந்திரன் சாடல்!

இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம். 

எனவே, தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது’’ என மட்டக்களப்பில் சனிக்கிழமை (16) ஊடகங்க ளுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக பேசுபொருளாகியுள்ள விடயம் இந்த உலகத் தமிழர் பேரவை நாடகம். 

இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைமுகமாக பாத்திரத்தை ஏற்று ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்குவதுடன்துடன் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு லிபரல்வாதியாக காட்டி உலக நாடுகளில் இருந்து ரணிலுக்கு தேவைப்படுகின்ற நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு ஏமாற்று நாடகமாகும்.

இந்த உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடந்த 14 வருடங்களில் குறைந்தது 12 வருடங்கள் ஒன்றாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் மற்றும் பல இராஜதந்திர மட்டங்களுக்கும் சென்று தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கும் பல காரியங்களை செய்திருக்கின்றனர்.

குறிப்பாக சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்குகின்ற சுமந்திரனது செயற்பாடுகளுக்கு இந்த உலகத் தமிழர் பேரவை முழுமையாக பக்கபலமாக இருந்திருக்கின்றது. அதேபோன்று, 2015ஆம் ஆண்டிலே ரணில் - மைத்ரியோடு இணைந்திருந்த போது அவர்களுடன் இணைந்து ஒற்றையாட்சிக்குள் 'ஏக்கீய ராஜ்ய' என்ற ஆட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற முழு சதிமுயற்சிகளுக்கும் சுமந்திரனுடன் ஒன்றாக சேர்ந்து பயணித்தவர்கள்தான் இவர்கள்.

ஒருபுறம், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தமிழர்களுடைய பிரச்சினையை தீர்ப்பார்கள் என சர்வதேசத்துக்கு விம்பத்தை ஏற்படுத்தி நிதிகளை பெற்றுக் கொடுப்பதை செய்து கொண்டு மறுபுறம், தமிழ் தேசிய உணர்வுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என ஒற்றையாட்சியை புறக்கணித்து சமஷ்டி தீர்வு தேவை என்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கோபத்தை தணிப்பதற்காக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் ரணிலை விமர்சிக்கின்ற பாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் உலகத் தமிழர் பேரவையுடன் தாங்கள் ஒன்றாக இருந்து செயற்படுவதை காட்டிக் கொள்ளாமல் அவர்கள் தன்பாட்டில் வந்தது போலவும் அவர்களை தாங்கள் சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல மூன்று நான்கு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கின்ற பன்முக நாடகங்களில் ஒன்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கை. இவர்களது சதிகள், துரோகங்கள் எல்லாம் இன்று அம்பலமாகி முழுமையாக நிராகரிக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே உலகத்தமிழர் பேரவையின் ஆரம்ப கோரிக்கையே தமிழர்களை குழிதோண்டி புதைப்பதாகும். அதனை அடியோடு நிராகரிக் கின்றோம். புலம்பெயர்ந்த மக்கள் இந்த உலகத்தமிழ் பேரவையின் துரோகங்கள், சதிகளை வெளிப்படுத்த வேண்டும். முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று 

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.