சீஷெல்ஸ் பாதுகாப்பு படைகளின் பிரதானி இலங்கை விஜயம்!
சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் (Brigadier Michael Rosette) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய, அவர் நேற்று (14) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவரை, வெலிசர கடற்படை கட்டளை அதிகாரி கொமடோர் பிரசாத் ஜயசிங்க வரவேற்றுள்ளளார்.
பிரிகேடியர் ரொசெட் இலங்கையில் எட்டு நாட்கள் தங்கியிருந்து உத்தியோகபூர்வ சந்திப்புகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.