கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – வௌியான முக்கியத் தகவல்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – வௌியான முக்கியத் தகவல்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் வு-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிய வந்துள்ளது.

இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.