ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவர்கள் ஆறு பேர் கைது!

ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவர்கள் ஆறு பேர் கைது!

சக மாணவர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 29 ஆம் திகதி தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாகக் கூறி ஹோமகம பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

மே 6, செவ்வாய்க்கிழமை மாணவர்கள் ஹோமகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாப்பிட்டிய மற்றும் கலங்குட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.