திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நடு வீதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

திடீரென நடுவீதியில் தீ பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது..

பிரதேச மக்கள் இணைந்து உடனடியாக தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.