முப்படைகளுக்குச் சொந்தமான வாகனங்கள் புகை பரிசோதனை

முப்படைகளுக்குச் சொந்தமான  வாகனங்கள் புகை பரிசோதனை

நாட்டில் முப்படைகளின் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்களில், ஆயிரத்து 400 வாகனங்கள் முதல் சுற்று சோதனையில் தோல்வியடைந்ததாக மோட்டார் வாகனத் துறையின் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்தின் இயக்குனரும் பொறியியலாளருமான தாசுன் கமகே தெரிவித்துள்ளார்.

கரும்புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் Clean srilanka திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், முப்படை வாகன ஆய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்திலிருந்து பத்து தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் இத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.