மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை குடியேற்றவாசிகள்!

மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை குடியேற்றவாசிகள்!

மலேசியாவிலிருந்து (Malaysia) கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 1,500இற்கும் மேற்பட்ட சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் சுமார் 1,608 சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகள் மலேசியாவில் வசிப்பவதாக கண்டறியப்பட்டுள்ளது.  

மலேசிய அரசாங்கத்தினால் கடந்த மார்ச் 01ஆம் திகதி ஏப்ரல் முதல் 30ஆம் திகதி வரையிலான இரண்டு மாத காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, சட்ட விலக்குகள் மற்றும் நிதி நிவாரணம் வழங்குவதன் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். 

இதன்போது, மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கும், தேவையான பயண ஆவணங்களை வழங்குவதற்கும், மேலும் வெளியேற்றப்படுவோர் அனைவருக்கும் சுமூகமான வருவாயை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட மலேசிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் மற்றும் பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, திருப்பி அனுப்பும் திட்டம் தொடங்குவதற்கு முன், கடந்த 2024 ஜனவரி ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை, மலேசியாவில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 124 சட்டவிரோத குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். 

இதன்மூலமாக நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை தற்போது 1,732 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.