பாப்பரசரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமைச்சர் விஜித வத்திக்கான் பயணம்

பாப்பரசரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமைச்சர் விஜித வத்திக்கான் பயணம்

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

வத்திக்கான் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நாளை (26) நடைபெறவு ள்ள பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது