தேயிலை கொழுந்தின் தரத்தை உறுதிப்படுத்த புதிய கொள்கை

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும், தேயிலை கொழுந்தின் தரத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஈ-60 கொள்கையை ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தேயிலை தொழில் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் நேற்று பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

ஈ-60 கொள்கை என்பது, தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இலைகளில் குறைந்தது 60 சதவீதம் உயர்தரத்தில் இருக்க வேண்டும்.

தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தேயிலை விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் என்பனவற்றின் அதிகாரிகள் பெருந்தோட்டத்துறை அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த தீர்மானத்தை ஏதேனும் ஒரு நிறுவனம் மீறினால் அவர்களின் உரிமத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை தேயிலை சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.