மது, சிகரெட் மற்றும் போக்குவரத்துக்கு இலங்கை மக்கள் அதிகம் செலவிடுகின்றனர்!

மது, சிகரெட் மற்றும் போக்குவரத்துக்கு இலங்கை மக்கள் அதிகம் செலவிடுகின்றனர்!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி மே மாதத்தில் பதிவாகியிருந்த 1.6 சதவீதத்திலிருந்து ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து, மதுபானங்கள் மற்றும் புகையிலைக்கு அதிக செலவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. 

இந்த காலகட்டத்தில் போக்குவரத்து வகை பணவீக்கம் 6.9 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது,

அதேவேளை, விந்தகங்கள் மற்றும் உணவகங்கள் பிரிவில் 4.9 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.

மதுபானங்கள் மற்றும் புகையிலை வகைகளில் பணவீக்கம் 26.6 சதவீதத்தில் இருந்து 27. 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மே மாதத்தில் 0.5 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், உணவு அல்லாத பிரிவில் பணவீக்கம் 2.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு செலவு குறைந்துள்ளது.