இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.

அதன்படி, வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி தனது உரையில்,

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதில் இருதரப்புக் கடன் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் , பலதரப்புக் கடன் 11.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வணிகக்கடன் 14.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் & இறையாண்மைப் பத்திரங்கள் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறன்றது.

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடந்த ஜூன் 26ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை அதிகாரிகள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.