மத்திய வங்கியின் ஆளுநர் இன்று அமைச்சரவையில் பிரசன்னமாவார்!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்றையதினம் அமைச்சரவை முன்னிலையில் பிரசன்னமாகவுள்ளார்.
கடந்த வாரம் அமைச்சரவை கூடிய போது, இலங்கை மத்திய வங்கியின் சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் அதன் ஆளுநரின் நிலைப்பாடு அறியப்பட வேண்டும் என அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்பிரகாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அமைச்சரவையின் இன்றைய கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.