இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த சர்வதேச நாணய நிதியக் குழு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று கொழும்பில் உள்ள நிதியமைச்சில் சந்தித்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியக் குழுவிற்கும் இடையில் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கான சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டமானது உறுதியான பலனைத் தரும் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்
இந்த திட்டத்தை செயற்;படுத்துவதில் உறுதியான உறுதிப்பாட்டிற்காக இலங்கை அதிகாரிகளை அவர் பாராட்டினார், அத்தகைய அர்ப்பணிப்பு மாற்றத்திற்கு உந்துதலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார.
இதன் காரணமாக பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பில் ப்ரூயர் தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்
இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியக் குழுவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இலங்கையின் ஈடுபாட்டின் சாதகமான விளைவுகள் குறித்து எடுத்துக்காட்டப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.