வெதுப்பக பொருட்களின் விலையை குறைக்க முடியாது - வெதுப்பக சங்க தலைவர் அறிவிப்பு!
பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயு விலையை குறைப்பதால் மட்டும், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.