மதுபானங்களின் விலை 90 முதல் 150 ரூபாயாக அதிகரிக்கும்!

மதுபானங்களின் விலை ஜனவரியில் இருந்து 90 முதல் 150 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று மது உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மதுபானங்களின் விலை 90 முதல் 150 ரூபாயாக அதிகரிக்கும்!

ஜனவரி முதலாம் திகதி முதல் மதிப்புக்கூட்டு வரி அல்லது வெற் வரி 18 சதவீதம் உயர்த்தப்படுவதால் மதுபான நிறுவனங்கள் மதுபானங்களின் விலையை 150 ரூபாயாக உயர்த்தவுள்ளன.

எத்தனோல், வெற்று மதுபான போத்தல்கள், மதுபான போத்தல் ஒட்டிகள், மூடிகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மதுபானம் அடங்கிய போத்தல்கள் மீதான வெற் வரி அதிகரிப்பே இதற்கான காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, சாராயப் போத்தல் ஒன்றின் தற்போதைய விற்பனை விலையான 3,260 ரூபாய் - 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 3,350 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மதுபானங்கள் மீதான மதுவரி இந்த வருடம் இரண்டு தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.